மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - உங்கள் சமையலறை பாதுகாப்பானதுதானா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - உங்கள் சமையலறை பாதுகாப்பானதுதானா?

கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் பலரை வீட்டுக்குள்ளேயே முடக்கியிருக்கிறது. இதனால் சமையலறையின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. கோடையின் உச்சநிலையில் நெருப்பினால் உண்டாகும் விபத்துகள், பெரும்பாலும் நமது கவனக் குறைவாலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளாமையாலுமே ஏற்படுகின்றன. பலவிதமான தீ விபத்துகள் நடந்தாலும், வீடுகளில் நிகழும் தீ விபத்துகள் பெரும்பாலும் சமையலறையில்தான் ஏற்படுகின்றன.

இதுபோன்ற விபத்துகள் நடக்காதவாறு நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?

*சமையல் எரிவாயு சிலிண்டர் சரியான நிலையில் இருக்கிறதா... வாயுக் கசிவு உள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். கசிவு இருந்தால் தாமதிக்காமல் சரிசெய்ய வேண்டும்.

* அடுப்புக்கும் சிலிண்டருக்கும் இடையே உள்ள டியூபின் நீளம், சரியாக ஒன்றரை மீட்டர் இருக்க வேண்டும். டியூப் வளைக்கப்பட்டோ, மடக்கப்பட்டோ இருக்கக் கூடாது.

*எந்தக் காரணம்கொண்டும் சிலிண்டருக்குக் கீழே அடுப்பு இருக்குமாறு வைக்காதீர்கள்.

* விபத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவியை வாங்கி வீட்டில் பொருத்தலாம்.

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எலெக்ட்ரிக் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துவைக்கவும்.

* தீ பற்றும் பொருட்களை அடுப்படியில் வைக்கக் கூடாது.

* சமைக்கும்போது காட்டன் உடைகளை அணிந்துகொள்வது நல்லது.

பாதுகாப்பையும் மீறி, தீப்பிடித்துவிட்டால் செய்ய வேண்டியவை

*எரியும் பொருளை விட்டுவிட்டு, சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அங்கிருந்து அகற்றிவிடலாம். எரியும் பொருள் சிறியதாக இருந்தால், அதைத் தனியே பிரித்துவிடவும்.

*எரியும் பொருளின் மீது தண்ணீர் ஊற்றுவதால், அது எரிவதற்குத் தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு, தீ அணைந்துவிடும்.

*எரியும் பொருளுக்கு, மேற்கொண்டு காற்று கிடைக்காதவாறு மூடி அணைக்கவும். எரியும் பொருள் மீது நுரையைப் பாய்ச்சலாம். எண்ணெய்மீது நுரை படிந்து காற்றைத் தடைசெய்து, தீயை அணைத்துவிடும்.

* அடுப்பின் மீது சிந்தும் சிறு துளி எண்ணெய், தீயை ஏற்படுத்தக்கூடும். உடனடியாகத் தண்ணீரை ஊற்றினால் அந்தத் தீ அணைந்துவிடும் என நாம் நினைப்போம். ஆனால், அது மிகப் பெரும் தவறு. எண்ணெயால் ஏற்பட்ட தீ மீது தண்ணீர் ஊற்றக் கூடாது. அதற்குப் பதில், சமையலறையின் கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, அவசர எண்ணுக்கு அழைத்து, தீயணைப்பு உதவிகளைப் பெற வேண்டும்.

* சிறிய தீ விபத்துக்களின்போது பயன்படுத்த, ஒரு ஃபயர் ப்ளாங்கெட் (Fire blanket) மற்றும் ஃபயர் எக்ஸ்டிங்கியூஷர் (Fire extinguisher) வீடுகளில் வைத்திருப்பது மிகவும் நல்லது. சிறிய அளவிலான தீயின் மீது அதைப் போர்த்திவிட்டால், தீ பரவுவது தடுக்கப்படும். ஃபயர் எக்ஸ்டிங்கியூஷருக்குள் இருக்கும் பொருள், தீயைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

* உடைந்த மின் ஸ்விட்சுகளைத் தொடாமல், அவற்றை உடனே மாற்றவும்.

* மின்சாதனங்களிலோ, மின்சாரம் செல்லும் வயர்களிலோ தீப்பிடித்துக்கொண்டால், அதனால் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, உடனடியாக மெயின் ஸ்விட்சை அணைக்கவும்.

தீ உடலில் பட்டு புண்ணாகி விட்டால் செய்ய வேண்டியது... செய்யக் கூடாதது

* மின் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீரை ஊற்றாதீர். மெயின் ஸ்விட்சை உடனடியாக ஆஃப் பண்ணவும். தீயணைப்பானைப் பயன்படுத்தவும்.

* தீப்பிடித்துக்கொண்டால், பதற்றப்படாமல் புத்திசாலித்தனமாகவும் வேகமாகவும் செயல்படவும்.

* தீப்புண்ணை சுமார் 15 நிமிடங்கள் தூய்மையான, குளிர்ந்த நீரில் அமிழ்த்தி வைப்பது நல்லது.

* காயம் முகத்தில் என்றால், மென்மையான மற்றும் தூய்மையான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, காயத்தின் மீது வைக்கவும். அடிக்கடி குளிர்ந்த நீரில் நனைத்து மாற்றி மாற்றிப் போடலாம்.

* ஆனால், தீக்காயத்தைத் துணியால் தேய்க்கக் கூடாது. இவ்வாறு செய்தால், சிதைவு, சிவத்தல், கொப்புளம் வருதல் மற்றும் வலியின் அளவைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.

நேற்றைய ரெசிப்பி: இஞ்சி - புளி ஊறுகாய்

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 16 மே 2021