மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

ஒலிம்பிக்கை ரத்து செய்: பெருகும் ஆதரவு!

ஒலிம்பிக்கை ரத்து செய்: பெருகும் ஆதரவு!

ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் மூலம் 3.5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த (2020) ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த (2021) ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் வருகிற ஜூலை 23ஆம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதற்கிடையில் அந்த நாட்டில் நடந்த சர்வே ஒன்றில், 58 சதவிகிதம் பேர் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். எனினும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு சர்வதேசப் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜப்பானைச் சேர்ந்த கென்சி உட்சுனோமியா என்பவர் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கினார்.

கடந்த ஒன்பது நாட்களில் இந்த இயக்கத்தின் மூலமாக 3 லட்சத்து 50 ஆயிரம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இதை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களிடம் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து அவர், “சர்வதேச ஒலிம்பிக் போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கக்கூடிய நிலையில் ஜப்பான் நாட்டு மக்கள் தற்போது இல்லை. எனவே, அத்தகைய மகிழ்ச்சியான சூழல் மீண்டும் வரும்போது ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானில் நடத்த வேண்டும்.

மேலும் தற்போதைய நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால், உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான நிதியை ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செலவிட வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும். எனவே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 15 மே 2021