மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

மேலும் நான்கு இடங்களில் கொரோனா வார் ரூம்!

மேலும் நான்கு இடங்களில் கொரோனா வார் ரூம்!

சென்னையில் இருப்பதைப் போன்று, கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வார் ரூம் விரைவில் அமைக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை இஎஸ்ஐ மருத்துவனை, கொடிசியா கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு, படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்டறிந்தார். அப்போது, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் உடனிருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கோவை இஎஸ்ஐ மருத்துவமனை 830 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் முதல் மற்றும் இரண்டாம் அலை என இதுவரை 17,000 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு இறப்பு விகிதமும் குறைவாக இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் மருத்துவர்கள் சிகிச்சைக்கு ஏற்ப ஆக்சிஜனை குறைத்து பயன்படுத்த வேண்டும் என மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இந்த அறிவுரையை பின்பற்றுவதில் முதல் இடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது. அதுபோன்று, ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் இருக்கும் நோயாளிகளை குப்புறப்படுக்க வைத்து, ஆக்சிஜனின் அளவு அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தனியார் மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு ஆக்சிஜன் பிளாண்ட்டும், ஒரு சப்ளையரும் உள்ள நிலையில், மருத்துவர்களின் கோரிக்கையின் படி கூடுதலாக ஒரு ஆக்சிஜன் பிளாண்ட இங்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் இருப்பது போன்று கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனா வார் ரூம் விரைவில் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

சனி 15 மே 2021