மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

ரெம்டெசிவிர் : மக்கள் சாலை மறியல்!

ரெம்டெசிவிர் :  மக்கள் சாலை மறியல்!

ரெம்டெசிவிர் மருந்துக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவாரமாக காத்திருந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் புதிதாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு, அவர்களது உடல்நிலைக்கேற்ப ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இங்கு மக்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழகத்தில் கோவை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட ஐந்து இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது.

இருப்பினும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கூடும் மக்கள் கூட்டம் குறையவில்லை. அதனால், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டது. அதன்படி, இன்று காலை 9 மணிக்கு மருந்து விற்பனை தொடங்கியது. கேட்டை திறப்பதற்கு முன்பே, தனிநபர் இடைவெளியின்றி ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேட்டை திறந்துவிட்டதும், வரிசையில் செல்லாமல், மக்கள் கூட்டமாக உள்ளே சென்றனர்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டோக்கன் வாங்கி ஒரு வாரமாக காத்திருந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று புதிதாக டோக்கன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரெம்டெசிவிர் கிடைக்காத ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து மருந்து வாங்குவதற்காக வந்து நேற்றிரவு முதல் காத்திருந்த நிலையில், 500 பேருக்கு மட்டுமே புதிதாக டோக்கன் கொடுக்கப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், மருந்து கிடைத்தால் மட்டுமே தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியும் என்றும் மக்கள் கூறி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

சனி 15 மே 2021