மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

ஊரடங்கு விதிமீறல்: மீண்டும் தடியடி!

ஊரடங்கு விதிமீறல்: மீண்டும் தடியடி!

ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிபவர்களை போலீசார் தடியடி கொடுத்து எச்சரித்து வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். வெளியே வரும் மக்களிடம் வாகனத்தை பறிமுதல் செய்தல், தடியடி போன்றவை இருக்கக் கூடாது. ஊரடங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஊரடங்கை மீறி பலரும் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தனர். ஊரடங்கு போல் இல்லாமல் வழக்கமான நாட்கள் போல் காட்சியளித்தது.

இதையடுத்து, ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது தேவையின்றி வெளியே வருபவர்களையும், வாகனங்களையும் போலீசார் அடித்து அனுப்புகின்றனர். இதுகுறித்து வெளியான வீடியோவில், வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் அடித்து சேதப்படுத்துகின்றனர். மேலும், ஊரடங்கின்போது இரண்டு மூன்று பேர் பைக்கில் வர வேண்டுமா என்று கூறி அடிக்கின்றனர். இதனால், பலரும் போலீசை பார்த்து ஓடி ஒளிகின்றனர்.

சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு அமலின்போது தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னையில் சட்டம் -ஒழுங்கு காவல் துறையினர் 200 இடங்களிலும், போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் ஊரடங்கு விதிகளை மீறிய 2079 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை என்ற குற்றத்திற்காக 83 வழக்குகளும் , குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடைகளை திறந்து வைத்ததற்காக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஊரடங்கு விதியை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

சனி 15 மே 2021