மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

மாநிலங்களுக்கு 192 லட்சம் தடுப்பூசிகள்!

மாநிலங்களுக்கு 192 லட்சம் தடுப்பூசிகள்!

மே மாதம் 16 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், 191.99 லட்சம் அளவிலான தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக இருப்பதால், மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 3,890 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,53,299 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 36,73,802 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல மாநிலங்களில் இரண்டாவது டோஸ் போட முடியாமலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியாமலும் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று(மே 14) மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மே 16-31 தேதிகளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 191.99 லட்சம் (162.5 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 29.49 லட்சம் கோவாக்சின்) தடுப்பூசிகள் வழங்கப்படும்.

இந்த ஒதுக்கீட்டிற்கான விநியோக அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்படும். ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை நியாயமான முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும், தடுப்பூசி வீணாவதைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநிலங்கள் உத்தரவிட வேண்டும்.

மே 1-15 வரையில், மாநிலங்களுக்கு 1.7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 18 கோடி தடுப்பூசி டோஸ்கள் பயனர்களுக்கு போடப்பட்டுள்ளன.

உலகளவில் தினசரி தடுப்பூசி போடப்படும் வேகத்தில் இந்தியா மிக வேகமாக இருக்கிறது. தடுப்பூசி தொடங்கப்பட்டு 114 நாட்களில். இந்தியாவில் 17 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை அமெரிக்கா 115 நாட்களிலும், சீனா 119 நாட்களிலும் அடைந்தது குறிப்பிடத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 15 மே 2021