மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

தமிழகத்தில் 18+ தடுப்பூசி திட்டம் : அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் 18+ தடுப்பூசி திட்டம் : அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(மே 14) மதுரைக்கு சென்றார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,” தமிழகத்திற்கு 5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதால், ஓரிரு நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். ரெம்டெசிவிர் மருந்து இருந்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்ற பொய்யான தோற்றத்தை ஒரு சில மருத்துவர்கள் உருவாக்கி வருவது வருத்தமளிக்கிறது. ரெம்டெசிவிர் மருந்து எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், 7 ஆயிரம் மட்டும் தான் மத்திய அரசு வழங்குகிறது” என கூறினார்.

இதையடுத்து, நேற்று மாலை மதுரையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மதுரையில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், மதுரைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதலாக ஆக்சிஜன், படுக்கை, மருத்துவர்கள், செவிலியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சில நாட்களில் மதுரை மருத்துவமனைக்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். மதுரைக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து 500லிருந்து 1000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பு சரியாக ஏற்படுத்தி இருந்தால், இரண்டாம் அலையில் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. தற்போது செய்யப்படும் ஏற்பாடுகள் மூலம் 3 ஆம் அலையை சிறப்பாக கையாள முடியும். ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம், அண்டை மாநிலங்களில் இருந்து வருவது நிறுத்தப்பட்டதுதான். ஸ்டெர்லைட் ஆலையில் ஒரிரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்கும்.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்பது மனசாட்சி இல்லாத செயல். அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா மரணங்களை மறைப்பது சரியானது அல்ல. கொரோனா மரணங்கள் மறைப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கொரோனா மரணங்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மை அவசியம்” என கூறினார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 15 மே 2021