மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - புளி ஊறுகாய்

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - புளி ஊறுகாய்

தற்போதைய சூழ்நிலையில் கடைகளில் விற்கும் ஊறுகாயை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவதே நல்லது. அவை கெடாமல் இருக்கக் கலக்கப்படும் சேர்மானங்கள் வெயில் காலத்தில், கொரோனா நேரத்தில் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே, வீட்டில் தயாரித்த சுத்தமான ஊறுகாயை, அளவாகச் சேர்த்துக்கொண்டால் என்றுமே ஆபத்தில்லை. அதற்கு இந்த இஞ்சி - புளி ஊறுகாய் உதவும்.

என்ன தேவை?

தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்

பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்)

புளி - சிறிய எலுமிச்சை அளவு

வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

குறிப்பு:

தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

நேற்றைய ரெசிப்பி: நெல்லிக்காய் ஊறுகாய்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

சனி 15 மே 2021