மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

தமிழகம், கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலியாக, ரூ.400 கோடி ஏலக்காய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளைகிற ஏலக்காய்கள் கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் காலை, மாலை என இரண்டு முறை ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி, கட்டப்பனை, வண்டன்மேடு, விருதுநகர், டெல்லி, நாக்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலக்காய்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 8ஆம் தேதி முதல் வருகிற 16ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் எதிரொலியாக புத்தடி, போடியில் நறுமண பொருட்கள் வாரியத்தில் ஏலக்காய் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பல லட்சம் கிலோ ஏலக்காய் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடி ஏலக்காய் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் வடமாநிலங்களில் உள்ள ஏலக்காய் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏலக்காய் ஏற்றுமதி நடைபெறாததால் ஒரு கிலோவுக்கு ரூ.400 வரை விலை குறைந்து விட்டது.

இதேபோல் ஏலக்காய் விவசாயிகள், தங்களது தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

- ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 மே 2021