மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணம்!

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணம்!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் 30 ஆயிரத்தைத் தாண்டி செல்வதால், 108 ஆம்புலன்ஸ்களைப் போலவே தனியார் ஆம்புலன்ஸ்களும் அதிகமாக இயக்கப்படுகின்றன. இந்த சமயத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல், மருத்துவமனையில் படுக்கை இல்லாமல் ஆம்புலன்ஸில் காத்திருக்க வேண்டிய சூழலில், அதற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் தலா ரூ.25 ஆகவும்,

ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50 ஆகவும்,

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். கூடுதல் கட்டணம் குறித்து 104 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வெள்ளி 14 மே 2021