மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

கண்ணியமாக அடக்கம் செய்யுங்கள்!

கண்ணியமாக அடக்கம் செய்யுங்கள்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தினசரி பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் சென்று கொண்டிருக்கிறது. உயிரிழப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உடல்களை அடக்கம் செய்யவோ, எரிக்கவோ வசதி இல்லாமல் போகிறது. அதனால், சில இடங்களில் உயிரிழந்தவர்களை மொத்தமாக எரிப்பது, நதிகளின் கரை ஓரமாக வைத்து எரிப்பது, மேலும் நதிகளில் உடல்களை வீசி எறிவது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. உயிரிழப்போரை எரிக்க இடமில்லாமல் டோக்கன் போடப்பட்டு, மின்மயானங்களில் சடலங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,

உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய காத்திருக்க வைப்பதை தவிர்க்க, தற்காலிக தகன மேடை அமைக்க வேண்டும்.

சடலங்களை தொடாமல் மத சடங்குகளை செய்ய அனுமதிக்கலாம். மத நூல்களிலிருந்து வசனங்களை வாசிக்கவும், புனித நீரை தெளிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் இறந்தவர்கள் உடலை தொடாமல் செய்ய வேண்டும்.

மின் மயானங்களை அதிகரிக்க வேண்டும்.

இறந்தவர்களின் உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய முடியாத நிலையில், அதை மாநில ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளலாம்.

கொரோனாவால் இறந்தவர்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் மொத்தமாக அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ கூடாது.

ஊடகங்களில், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நேரடியாக காட்டக் கூடாது.

சடலங்களை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் .

தடுப்பூசி செலுத்துவதில் மயான ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இடுகாடு, மின் மயானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 மே 2021