மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்றால் நடவடிக்கை: பிரதமர்!

கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்றால் நடவடிக்கை: பிரதமர்!

கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்றால் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது, குறிப்பாக ரெம்டெசிவர் போன்ற மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில், இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு உதவித் தொகையை இன்று விடுவித்த நிகழ்ச்சியில், நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி பேசினார்.

“நம் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கொரோனா வைரஸ் உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் இயன்ற அனைத்தையும், இரவு பகல் பாராமல் அரசு செய்து வருகிறது.

இதுவரை நாடு முழுவதும் சுமார் 18 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக முக்கிய பாதுகாப்பை வழங்கும். தீவிர நோய்ப் பாதிப்பு அபாயத்தை இது குறைக்கும். இந்தக் கடினமான நெருக்கடிக் காலத்தில், ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வதில் ஆயுதப் படையினர் முழு ஆற்றலுடன் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. நாட்டின் மருந்து துறை அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பதுக்கும் கள்ளச்சந்தைக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை இழக்கும் நாடு அல்ல .இந்தச் சவாலை ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் சமாளிக்க முடியும். ஊரகப் பகுதிகளிலும் கொரோனா அதிகளவு பரவி வருகிறது. கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

-பிரியா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 14 மே 2021