மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, தமிழக அரசும் அனுமதி அளித்து, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரம் பழுதடைந்ததால், நள்ளிரவு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. குளிர்விப்பான் இயந்திரத்தைப் பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக ஆலை செயல்படாமல் இருந்ததால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்பதால், அதுவரை ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை லாரி மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ” ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மூன்று நாட்கள் ஆகும். பழுது சரி செய்யப்பட்ட பின் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வெள்ளி 14 மே 2021