மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

பயன்பாட்டுக்கு வரும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

பயன்பாட்டுக்கு வரும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

இந்தியாவில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அடுத்தப்படியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டில் வரவுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், "ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகளின் முதல் பேட்ச் இந்தியா வந்தடைந்துள்ளது, இந்திய சந்தைகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் விற்பனைக்குக் கிடைக்கும். இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் பணி, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்தில் ஜூலை மாதம் தொடங்கும்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மூன்று வார இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களிலும் ஆன்டிஜென்கள் ஒரே அளவில் உள்ள நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸிலும் உள்ள ஆன்டிஜென்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் ஆகஸ்ட்-டிசம்பர் காலகட்டத்தில் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயாராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 75 கோடி டோஸ்களும், கோவாக்சின் தடுப்பூசி 55 கோடி டோஸ்களும் தயாராக இருக்கும்.

மேலும், பைசர், ஜான்சன் & ஜான்சன், மார்டனா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

உலகிலேயே கொரோனாவுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட முதல் தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏப்ரல் 12ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது கொரோனாவுக்கு எதிராக 91.6% செயல்திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வெள்ளி 14 மே 2021