மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

திருப்பதி: தரிசன தேதியை மாற்றிக்கொள்ளலாம்!

திருப்பதி: தரிசன தேதியை மாற்றிக்கொள்ளலாம்!

கொரோனா இரண்டாவது பரவலைத் தொடர்ந்து ரூ.300 சிறப்பு தரிசனத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதம்தோறும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த மாதத்துக்கு முன்பாகவே தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும், திருப்பதி தேவஸ்தான கவுன்டர்களில் இலவச தரிசன டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன. ஆன்லைனில் 25,000 ரூ.300 டிக்கெட்டுகளும், கவுன்டர்களில் 25,000 டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த ஆண்டு மார்ச் - ஜூன் 2020 காலகட்டத்தில் கொரோனா முதல் அலை காரணமாக திருப்பதி கோயில் மூடப்பட்டது. அதன் பிறகு கோயில் திறக்கப்பட்டபோது குறைவான பக்தர்களே வருகை புரிந்தனர். இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதும் அரசு மற்றும் தேவஸ்தானத்தின் கட்டுபாடுகளால் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

கடந்த திங்கட்கிழமை (மே 10) அன்று 2,400 பக்தர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இது திருப்பதி கோயில் வரலாற்றில் மிகக்குறைவான எண்ணிக்கையாகும். அதேநாளில் 1,375 பேர் மட்டும் மொட்டை அடித்துக்கொண்டனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 21 முதல் மே 31ஆம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசனத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் வர முடியாவிட்டால் வேறு தேதியைத் தேர்ந்தெடுக்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

எப்போதும் மக்கள் வெள்ளத்துடன் காணப்படும் திருமலை தற்போது வெறிச்சோடி உள்ளது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 13 மே 2021