மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ஆக்சிஜன் விநியோகம்: முருகானந்தம் தலைமையில் குழு!

ஆக்சிஜன் விநியோகம்: முருகானந்தம் தலைமையில் குழு!

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதை ஒழுங்குபடுத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனால், வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் கொள்முதல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மேற்குவங்கம், துர்காப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில், நாளைக்குள் சென்னைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதை முறைப்படுத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, எந்த மருத்துவமனைக்கு, எவ்வளவு ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும். தேவை அதிகம் உள்ள மருத்துவமனைகளுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ‘வார் ரூம்’ எனப்படும் கட்டளை மையத்துடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 13 மே 2021