மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

கொரோனா தடுப்பு பணி: தன்னார்வலர்களுக்குப் பயிற்சி!

கொரோனா தடுப்பு பணி: தன்னார்வலர்களுக்குப் பயிற்சி!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாகத் தன்னார்வலர்களுக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில்,

“கொரோனா தடுப்பு பணியின் ஓர் முக்கிய பகுதியாக கோவிட் 19 பாதிப்புகளைத் தடுக்க ஓர் தன்னார்வலர்கள் படையை உருவாக்க உள்ளோம்.

அதற்காக , ஆறு தலைப்புகளில் பத்து மணி நேரம் பயிற்சி அளிக்கவுள்ளோம். இன்று (மே 13) முதல் மே 15ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குக் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் பயிற்சி நடைபெறும்.

காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3.00 முதல் 4.30 மணி வரையும் பயிற்சிகள் நடைபெறும். மிகச் சிறந்த மருத்துவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது.

மருத்துவர்கள், சுந்தர ராமன், அமலோர் பவநாதன், ஃபரூக் அப்துல்லா, காசி, ரெக்ஸ் சற்குணம், விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், நுண்ணுயிர் துறைப் பேரா. திருநாவுக்கரசு, பேரா. கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

பயிற்சி எடுத்துக் கொண்ட தன்னார்வலர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் கோவிட் 19 பெருந் தொற்றுகளுக்குத் தக்க வழிகாட்டுதல்களைச் செய்ய இயலும். சுற்றுப் புறங்களில் உள்ளோருக்கு ஒரு தெளிவையும் நம்பிக்கையும் ஊட்டவும் இயலும்.

பயிற்சிக்குப் பின்னரும் களத்தில் உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு நிபுணர்கள் குழு தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டே இருக்கும். பயிற்சி வகுப்புகள் தமிழிலேயே நடைபெறும். ஆறு பயிற்சி வகுப்புகளிலும் முழுமையாகக் கலந்து கொள்வோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுதவிர கருத்துத் தாள்கள் மின் நூல்கள் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு பெற்ற, கோவிட் 19 தடுப்பு பணிகளில் ஈடுபட விருப்பமுள்ள அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு பெறலாம். பங்கு பெறுவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல்/ வாட்ஸ்அப் வழியாகப் பயிற்சிக்கான இணைப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அனுப்பி வைக்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு: என்.மணி - 75982 25040, எஸ்.கிருஷ்ணசாமி - 80125 58638, ஆர்.காத்தவராயன் - 94438 11082, ரிஷி.சரவணன் - 79044 55681 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 13 மே 2021