மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ரிலாக்ஸ் டைம் : ஃபுல்ஜார் சோடா!

ரிலாக்ஸ் டைம் : ஃபுல்ஜார் சோடா!

கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் ரம்ஜான் நேரத்தில் ஸ்பெஷலாகக் களமிறங்கிய இந்த ஃபுல்ஜார் சோடாவை அங்கிருக்கும் செலிபிரிட்டிகள் தாங்கள் குடிப்பது போன்று வீடியோவாக எடுத்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட, தமிழ்நாட்டிலும் பரவியது ஃபுல்ஜார் சோடா வைரல். கோடைக்கு இதமான இதை நீங்களும் வீட்டிலேயே செய்து ரம்ஜானை வரவேற்கலாம்.

எப்படிச் செய்வது?

எலுமிச்சைப்பழச்சாறு இரண்டு டீஸ்பூன், இஞ்சிச்சாறு அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது அரை டீஸ்பூன், புதினா விழுது அரை டீஸ்பூன்,

சர்க்கரை கரைசல் 50 மில்லி, உப்பு அரை டீஸ்பூன், ஊறவைத்த சப்ஜா விதைகள் அரை டீஸ்பூன்... மொத்தத்தையும் சின்ன டம்ளரில் கலந்து வைத்துக் கொள்ளவும். பெரிய கண்ணாடி டம்ளரில் 400 மில்லி குளிர்ந்த சோடாவை நிரப்பவும். மசாலா கலவை இருக்கும் சின்ன டம்ளரை, சோடா உள்ள பெரிய கண்ணாடி டம்ளருக்குள் மூழ்கும்படி போட்டால், நுரைத்து வரும். அப்போதே உடனுக்குடன் பரிமாற வேண்டும். அதுதான் இதில் ஸ்பெஷல்.

சிறப்பு

உடனடி புத்துணர்ச்சி தரும். செரிமான கோளாற்றைச் சீராக்கும். ஃபுல்ஜார் சோடா குடிக்கும்போதும், புரை ஏறுவதற்கு வாய்ப்புள்ளது... ஜாக்கிரதை.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 13 மே 2021