மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

நிவாரண நிதி: உதவும் சிறு உள்ளங்கள்!

நிவாரண நிதி: உதவும் சிறு உள்ளங்கள்!

ஈரோட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக தனது உண்டியல் சேமிப்புப் பணத்தை ஆட்சியரிடம் நேரில் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பைச் சமாளிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து சிறுவர்கள் பலரும் தங்கள் சேமிப்புப் பணத்தை நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர்.

ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், கம்ப்யூட்டர் டிசைனிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மூத்த மகள் உள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது பெற்றோர் தரும் பாக்கெட் மணியை, கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்து வந்தார்.

தன்னுடைய சேமிப்புப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்த சிறுமி தன்ஷிகா தனது தந்தை சண்முகவேலுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து, தனது ஒரு வருட சேமிப்புப் பணமான 2,500 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் கதிரவன், உதவும் மனப்பான்மை கொண்ட சிறுமி தன்ஷிகாவைப் பாராட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய தன்ஷிகா, பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது. கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு சொல்வதைப் பொதுமக்கள் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக, மதுரையைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தங்களுடைய சேமிப்புப் பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தப் பேரிடர் காலத்தில் நடப்பது மனதுக்குச் சற்று நிம்மதி அளிக்கிறது. இந்த சின்ன வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் வருவது மிகப்பெரிய விஷயம். அந்த வகையில் இந்தச் சிறுவர்கள் சிறப்புப் பெற்றவர்களே.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 13 மே 2021