மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

படுக்கைக்குத் தட்டுப்பாடு: ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

படுக்கைக்குத் தட்டுப்பாடு: ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால், ஆம்புலன்ஸில் காத்திருந்த நோயாளிகள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, சென்னையில் பாதிப்பு 7 ஆயிரத்துக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 90 சதவிகிதப் படுக்கைகள் நிரம்பிவிட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு 4,368 படுக்கைகள் உள்ளன. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இங்கு உள்ள 785 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் நிரம்பிவிட்டன. அதனால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காததால், ஆம்புலன்ஸில் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்தி நாள்கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஆம்புலன்ஸ் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.

தீவிர பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பும் நேரிடுகிறது. அந்த வகையில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் காலையிலிருந்து காத்திருந்த 6 கொரோனா நோயாளிகள் நேற்று மாலை உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

வியாழன் 13 மே 2021