மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

கிச்சன் கீர்த்தனா: பூண்டு ஊறுகாய்!

கிச்சன் கீர்த்தனா: பூண்டு ஊறுகாய்!

உணவு மேஜையில் ஆபத்பாந்தவனாக விளங்குவது ஊறுகாய். மாங்காய், மாவடு, எலுமிச்சை, மாங்காய் இஞ்சி, கடாரங்காய், தோசைக்காய், பூண்டு, மாகாளிக்கிழங்கு, நெல்லிக்காய், பச்சை மிளகு, தக்காளி, பிரண்டை எனப் பலவற்றிலும் தயார் செய்யக் கூடியவை ஊறுகாய். இவற்றில் பலரால் விரும்பப்படுவது இந்தப் பூண்டு ஊறுகாய். ஊரடங்கு காலத்தில் இந்த ஊறுகாய், உங்களின் மதிய உணவைச் சிறப்பாக்கும்.

என்ன தேவை?

தோலுரித்த பூண்டு - 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)

எலுமிச்சைப்பழம் - 6 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்)

மல்லி (தனியா), வெந்தயம், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 25

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 50 மில்லி

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் தனியா, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிதளவு வதங்கியதும் அரைத்த பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவிடவும். பூண்டு முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

அவரவர் விருப்பத்துக்கேற்ப மிளகாயைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: ஈஸி மாங்காய் ஊறுகாய்!

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 13 மே 2021