மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

கொரோனா நிதி வழங்கிய சிறுவன்!

கொரோனா நிதி வழங்கிய சிறுவன்!

மதுரையைச் சேர்ந்த சிறுவன், இசைப் போட்டியில் தான் பெற்ற பரிசுத் தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி, ராஜலெட்சுமி என்ற தம்பதியின் மகன் பிரணவ் (8). இவருக்கு இசை மீது அதிகம் ஆர்வம் உள்ளதால், சின்ன வயதிலே ட்ரம்ஸ், பியானோ, கர்னாடிக் இசை, பறை உள்ளிட்ட இசைகளை முறைப்படி கற்று வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தி வரும் இசைக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு இசைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ட்ரம்ஸ் இசைப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை பெற்றார். அதில், அவருக்கு ரூ. 5,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தன்னுடைய பரிசுத் தொகை 5,000 ரூபாய் மற்றும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.5,000 என மொத்தம் 10,000 ரூபாயை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு கூகுள் பே மூலம் அனுப்பி வைத்துள்ளார் சிறுவன் பிரணவ். தன்னுடைய சேமிப்புப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுவனின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதுபோன்று மதுரையைச் சேர்ந்த சிறுவன் தான் சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக அளித்து, பாராட்டுகளையும் முதல்வரிடமிருந்து பரிசையும் பெற்றார். அந்த வரிசையில் தற்போது பிரணவ் என்ற சிறுவனும், தன்னுடைய சேமிப்புப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 12 மே 2021