மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காதவர்களுக்கான வசதிகள் குறையும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாக ‘வாட்ஸ்அப்’ உள்ளது. நாட்டில் 53 கோடி பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையில் (பிரைவசி பாலிசி) மாற்றம் செய்வதாக இந்த நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிவித்தது.

பயனாளர்களின் தகவல்களைத் தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளவே இந்த ஏற்பாடு என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பயனாளர்கள் புதிய விதிகளை ஏற்பதற்கு பிப்ரவரி 8ஆம்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் மே 15 வரை அது நீட்டிக்கப்பட்டது.

அந்தத் தேதிக்குப் பிறகும் ‘அப்டேட்’களை ஏற்காதவர்களின் கணக்கு நீக்கப்படாது. ஆனால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டல்கள் அனுப்பப்படும் என கடந்த வாரம் வாட்ஸ்அப் அறிவித்தது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “தொடர்ந்த நினைவூட்டல்களுக்குப் பின்னும் பயனாளர் புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால், ஒரு கட்டத்தில் அவரால் சாட் லிஸ்டை பயன்படுத்த முடியாது. அதேநேரம், அழைப்புகள், வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும்.

‘நோட்டிபிகேஷன்ஸ் எனேபில்டு’ ஆகியிருந்தால், தகவல்களை படிக்க, பதிலளிக்க முடியும். மிஸ்டு கால் அல்லது வீடியோ காலுக்கு திருப்பி பதிலளிக்க முடியும்.

அதன் பிறகு சில வாரக் கால அவகாசத்துக்குப் பின்பும் பயனாளர் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டால், அவருக்கு அழைப்புகள், நோட்டிபிகேஷன்கள் வராது. அவற்றை குறிப்பிட்ட பயனாளரின் செல்போனுக்கு அனுப்புவதை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்திவிடும்” என்று தெரிவித்துள்ளது.

-ராஜ்

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 12 மே 2021