மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

பாதிக்கப்படும் மஞ்சள்: விடுமுறை விலக்கு அளிக்க கோரிக்கை!

பாதிக்கப்படும் மஞ்சள்: விடுமுறை விலக்கு அளிக்க கோரிக்கை!

முழு ஊரடங்கு காரணமாக ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மஞ்சளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விலக்கு அளிக்க வேண்டும் என விவசாயிகளும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனை நிலையங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மஞ்சள் விலை குவிண்டால் 10,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கொரோனா பரவல், ஊரடங்கு, போக்குவரத்து தடை உள்ளிட்ட காரணங்களால் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது சராசரியாக குவிண்டாலுக்கு ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை விலை கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் தங்களிடம் இருப்பில் உள்ள மஞ்சள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட புது மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மஞ்சளை அறுவடை செய்தல், அதைப் பதப்படுத்துதல், மஞ்சளை விற்பனைக்காக கிடங்குகளில் இருப்பு வைக்கவும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், “ஈரோடு மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்த புதிய மஞ்சளை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் கிருமி நாசினி என்பதால் மருந்து உற்பத்தி மற்றும் மளிகை தேவைக்குத் தொடர்ந்து தடையின்றி அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் 10ஆம் தேதி முதல் வருகிற 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, மஞ்சளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடுத்த வாரம் முதல் மஞ்சள் சந்தைக்கு விலக்கு அளித்து ஏலம் நடைபெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 12 மே 2021