மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

சூப்பர் அட்வைஸ் : குப்புறப்படுத்து ஓய்வு எடுங்கள்!

சூப்பர் அட்வைஸ் : குப்புறப்படுத்து ஓய்வு எடுங்கள்!

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே குப்புறப்படுத்துக் கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கிட்டதட்ட ஐந்தாறு மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டில் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும். 2 மணி, 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுத்துக் கொள்ளலாம். கடின உடல் உழைப்பை தவிர்த்து வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைப்படி ivermectin, Azithromycin, ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம். பாரசிட்டமால் 500மி.கி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும். இணை நோய்கள் இருந்தால் அதற்கான மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டும். தொடர்ச்சியான காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும். கொரோனா தொடர்பான உதவிகளை பெற, 044 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா அறிகுறி உள்ளவர்கள் நுரையீரலுக்குள் ஆக்ஸிஜன் செல்லும் அளவை அதிகரிக்க, குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 12 மே 2021