>ரிலாக்ஸ் டைம்: தண்டாய்!

public

கோடைக்காலத்தில் வட இந்தியாவில் பருகப்படும் பிரசித்தி பெற்ற பானங்களில் ஒன்று இந்த தண்டாய். கொரோனா பரவலால் மீண்டும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில் வாட்டியெடுக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க, வீட்டிலேயே செய்து ருசிக்க இந்த தண்டாய் உதவும்.

**எப்படிச் செய்வது?**

சிறிது நேரம் ஊறவைத்த கசகசா 5 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த பாதாம் 10, ஊறவைத்த கிர்ணி விதைகள் 2 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த உலர் திராட்சை 2 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த மிளகு 5, ஊறவைத்த பச்சை ஏலக்காய் 5, சர்க்கரை – 200 கிராம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அதில் குறைந்த அளவு ஐஸ் வாட்டர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு ஐஸ்வாட்டர் சேர்த்துக் கலந்து உடனடியாகப் பரிமாறவும்.

**சிறப்பு**

நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களை பாலுடன் கலந்து உண்ணும்போது உடலுக்கு புத்துணர்வு தரும். இதில் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய் பாதிப்புகளைத் தடுக்கும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *