மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

கிச்சன் கீர்த்தனா: ஈஸி மாங்காய் ஊறுகாய்!

கிச்சன் கீர்த்தனா:  ஈஸி மாங்காய் ஊறுகாய்!

உங்கள் டைனிங் அறையை ‘யம்மி ஏரியா’வாக மாற்றக்கூடியது ஊறுகாய். தற்போதைய சூழ்நிலையில் பரவலாகக் கிடைக்கும் மாங்காயைக்கொண்டு, ஈஸியான இந்த மாங்காய் ஊறுகாய் செய்து அசத்தலாம். இந்த ஊறுகாயின் சுவைக்காகவே சாப்பாட்டு நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பு விடுக்காமலே அங்கு ஆஜராகிவிடுவார்கள். கோடையில் கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

என்ன தேவை?

கிளிமூக்கு மாங்காய் - 2 (தோலுடன் சிறிய துண்டுகளாக்கவும்)

மிளகாய்த்தூள், கல் உப்பு - தலா 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வெயிலில் மூன்று முதல் நான்கு நாள்கள் வரை வைத்தெடுக்கவும். பிறகு, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். தேவையானால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.

குறிப்பு

கிளிமூக்கு மாங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் வெளியே வைத்தால் கெட்டுவிடும்.

நேற்றைய ரெசிப்பி: குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 12 மே 2021