மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

தடை எதிரொலி: தமிழகம் நோக்கி தொழிலாளர்கள்!

தடை எதிரொலி: தமிழகம் நோக்கி தொழிலாளர்கள்!

கர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, கட்டடத் தொழிலாளர்கள் ஓசூர் வழியாக தமிழகத்துக்கு நடந்தே வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவதால், அங்கு மேலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய முழு ஊரடங்கில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற பகுதிகளில், கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

சென்னை மாநகராட்சி ஆணையர் / மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகிதப் பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். குறிப்பாக, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு, தங்களுக்கு ஏதாவது ஓர் இடத்தில் வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்தில், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி, பணியாற்றிவந்த கட்டடத் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி வழியாக தமிழகம் வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், ஆட்டோக்களிலும், கடும் வெயிலில் நடந்தபடியும் தமிழக எல்லைக்கு மூட்டை முடிச்சுகளுடன் தொழிலாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 11 மே 2021