மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

இலவச ஆக்சிஜன் ஆட்டோ: சென்னை இளைஞர்களின் சேவை!

இலவச ஆக்சிஜன் ஆட்டோ: சென்னை இளைஞர்களின் சேவை!

சென்னையைச் சேர்ந்த இரு இளைஞர்கள், கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆட்டோவை இலவசமாக இயக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. வடமாநிலங்களை போன்று சூழ்நிலை மோசமாக இல்லாமல் இருந்தாலும், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை இல்லை என்று சொல்ல முடியாது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தன்னார்வலர்களும் இதுபோன்ற நேரங்களில் தங்கள் உயிரை பணயம் செய்து சேவைகள் செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார், சத்யராஜ் என்ற இரண்டு பட்டதாரி இளைஞர்கள் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆட்டோவை இலவசமாக இயக்கி சேவையாற்றி வருகின்றனர். கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை என்ற பெயரில் இந்த சேவையை செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, உணவு போன்றவற்றை இலவசமாக வழங்கி வந்த இவர்கள், தற்போது ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆட்டோவை இலவசமாக இயக்கி வருகின்றனர்.

இதுகுறித்து செல்போனில் தகவல் தெரிவித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் கொண்டு விடுகின்றனர். 24 மணி நேரமும் செயல்படுகின்ற இலவச ஆட்டோ சேவையின் மூலம் தினமும் 20 முதல் 30 பேரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக இளைஞர்கள் கூறுகின்றனர். நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த பிறகு, ஆட்டோவை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வதால், மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

இவர்களைப் போன்று பலரும் இந்த கொரோனா காலத்தில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 11 மே 2021