மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

கிச்சன் கீர்த்தனா: குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய்

கிச்சன் கீர்த்தனா: குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய்

உணவு காம்பினேஷன்களில் தயிர் சாதம் - ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. ஊறுகாய்களில் ஒரு வாரம் முதல் இரண்டாண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய வகைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஊறுகாய் வகைகளில் இந்த குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாயைக் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடனும் தொட்டுக்கொள்ளலாம்.

என்ன தேவை?

மாங்காய்த் துருவல் - 2 கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்). அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாட்கள் வெயிலில் வைக்கவும்).

காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும். சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.

மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும்.

குறிப்பு: பட்டைத்தூள், லவங்கத்தூள் ஆகியவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய்!

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 11 மே 2021