மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

கொரோனா நிதி வழங்கிய சிறுவனுக்கு முதல்வரின் பரிசு!

கொரோனா நிதி வழங்கிய சிறுவனுக்கு முதல்வரின் பரிசு!

சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ - தீபா தம்பதியின் மகன் ஹரீஸ்வர்மன் (7). மதுரை புனித பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன், சைக்கிள் வாங்குவதற்காக கிட்டதட்ட இரண்டு வருடமாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை, கொரோனோ பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துகளையும், கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதினார். ஆயிரம் ரூபாய் வரைவோலையுடன், தன் கைப்பட எழுதிய கடிதத்தையும் முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் முயற்சியைப் பாராட்டி, தனது சார்பில் சிறுவனுக்குப் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி நேரில் சென்று சிறுவனுக்கு சைக்கிளை பரிசாக வழங்கினார்.

இதையடுத்து, சிறுவனிடம் செல்போனில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது கொரோனா காலம் என்பதால் வெளியே சைக்கிள் ஓட்ட வேண்டாம் எனவும் நன்றாகப் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது, சிறுவன் தன்னுடைய மழலை பேச்சில் முதல்வருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

திங்கள் 10 மே 2021