மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

3ஆம் அலை அபாயம்: மத்திய அரசுக்கு உத்தரவு!

3ஆம் அலை அபாயம்: மத்திய அரசுக்கு உத்தரவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையில் எப்போது ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மே 15ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும், நாளொன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு குறையாவிட்டால் 700 முதல் 800 மெட்ரிக் டன் தேவைப்படும் என்றும் அதை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது குறித்தும், செங்கல்பட்டு மற்றும் குன்னூர் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவது குறித்தும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பாதிப்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிமன்றம், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால், டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும். மோசமான நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

-பிரியா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 10 மே 2021