மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

கொரோனா: உயிர் தியாகம் செய்யும் முன்களப் பணியாளர்கள்!

கொரோனா: உயிர் தியாகம் செய்யும் முன்களப் பணியாளர்கள்!

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் முன்கள பணியாளர்கள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடும் அவர்கள் கொரோனாவுக்கு பலியாவது நாட்டு மக்களிடையே மிகுந்த வேதனையைத் தருகிறது.

அந்த வகையில் தமிழக மக்களின் கண்களை கலங்க வைத்தவர் தேனி மாவட்டம், ஓடைப்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியா. மதுரை மருத்துவக்கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்த சண்முகப்பிரியா, 2005 பேட்ச் மாணவி ஆவார்.

கொரோனா பரவல் தொடங்கியது முதலே, மக்களைக் காப்பாற்றும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்திருக்கிறார். 8 மாத கர்ப்பிணியான சண்முகப்பிரியா, அனுப்பானடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வந்தார்.

கர்ப்பிணியாக இருப்பதால் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளவில்லை. ஏப்ரல் 27ஆம் தேதியிலிருந்து அவருக்கு லேசான காய்ச்சல், உடல் சோர்வு இருந்துள்ளது. பின்னர், ஏப்ரல் 30ஆம் தேதி மருத்துவமனைக்கு மீட்டிங்கிற்கு வந்தவர் உடம்பு முடியவில்லை என விடுப்பில் சென்றிருக்கிறார்.

பின்னர் மே 1ஆம் தேதி ஸ்வாப் டெஸ்ட் எடுத்திருக்கிறார். அதில் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்ததும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.

சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவரது நுரையீரல் 80% அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை கொடுத்தும், பலன் இல்லாமல் 8ஆம் தேதி இறந்து விட்டார் என்கின்றனர் மருத்துவ வட்டாரத்தில்.

குழந்தை பிறக்கும் நாளை எண்ணி எதிர்பார்ப்போடு காத்திருந்த சண்முகப்பிரியாவின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவர் சண்முகப்பிரியாவைத் தொடர்ந்து, கொரோனா வார்டில் பணியாற்றி வந்த இரு செவிலியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் இந்திராவும், வேலூர் அரசு மருத்துவமனை செவிலியர் பிரேமாவும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே இரு செவிலியர்களும் இறந்துள்ளனர்.

இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், முன்களப் பணியாளர்கள் உயிரிழப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வணங்காமுடி

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 10 மே 2021