மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

முழு ஊரடங்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு!

முழு ஊரடங்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு!

தமிழகம் முழுவதும் இன்று முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கான பணிகள் மட்டுமே வழக்கம்போல் இயங்குகின்றன. காய்கறி, மளிகை, பலசரக்கு,  இறைச்சிக் கடைகள் ஆகியவை 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன.

பேருந்துகள், கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் பரபரப்பு இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு ஊரடங்கில் தடையை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களைப் பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சார்பிலும், 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய காரணங்களின்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க 24  இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி  இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  போலீசார் எச்சரிக்கையையும் மீறி ஒரு நபர், வெளியே சுற்றினால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று  வேலூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.

காலை 4 முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்த பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர்.

சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம்

முன்களப் பணியாளர்கள் வழக்கம் போல பணியைத் தொடருவதால் அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக பேருந்துகளை இயக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்து , சென்னையில் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது.

பிரியா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

திங்கள் 10 மே 2021