மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

இன்று 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ!

இன்று 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ!

முழு அடைப்பு நாளை (மே 10) முதல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (மே 9) ஒருநாள் சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நாளை 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு நாட்களில் காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி உள்ளிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழில்கள் வழக்கம்போல இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற எந்த கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக், தியேட்டர்கள், மால்கள், ஷோரூம்கள் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஊரடங்கின்போது பொது போக்குவரத்துக்கு சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட ஏதும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஏதும் இயங்காது என்பதால் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ள நேற்றும் இன்றும் அனைத்து கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. கடைகளுக்கு அனுமதி அளிப்பதாக அரசு தெரிவித்ததால், மெட்ரோ ரயில்கள் இன்று இயங்குமா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இந்த நிலையில், இன்று (மே 9) ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

ஞாயிறு 9 மே 2021