மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

காவலர்களுக்கு கொரோனா : காவல் நிலையம் மூடல்!

காவலர்களுக்கு கொரோனா : காவல் நிலையம் மூடல்!

கோவையில் செல்வபுரம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக, கோவையில் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 92,579 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 750 ஆக அதிகரித்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதி இருக்கிறது. ஆனால், இதனால் எந்த பயனும் இல்லை. ஆக்சிஜன் இல்லாமல் இருக்கிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜெயக்குமார் உள்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து செல்வபுரம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

செல்வபுரம் காவல் நிலைய கட்டிடத்திற்கு எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் காவலர்கள் அதிகளவில் பாதிப்படைவது மட்டுமில்லாமல், உயிரிழந்தும் வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

ஞாயிறு 9 மே 2021