மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

ரிலாக்ஸ் டைம்: லெமன் மின்ட் கூலர்

ரிலாக்ஸ் டைம்: லெமன் மின்ட் கூலர்

தற்போதைய நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பானங்கள் மிகவும் அவசியம். அந்த வகையில் இந்த பானத்தில் நோயை விரட்டும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அத்துடன் கோடையில் ஏற்படும் சரும வளர்ச்சியை நீக்கி, செல்களைப் புத்துணர்ச்சி அடையச்செய்து தேகத்தைப் பொலிவாக்கும் இந்த லெமன் மின்ட் கூலர்.

எப்படிச் செய்வது?

ஒரு கொத்து புதினாவைச் சுத்தம் செய்து, அதனுடன் ஒரு எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து, 50 கிராம் சர்க்கரைச் சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இதை வடிகட்டாமல் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகவும்.

சிறப்பு

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். ‘ஆர்த்தரைட்டிஸ்’ எனப்படும் மூட்டுகளில் ஏற்படும் கீல்வாத நோய்களைத் தடுக்கும். கோடையில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

ஞாயிறு 9 மே 2021