மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம்: தேசிய சிறப்புப் படை!

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம்: தேசிய சிறப்புப் படை!

மாநிலங்களுக்கு ஆக்சிஜனைப் பகிர்ந்தளிக்க 12 பேர் கொண்ட தேசிய சிறப்புப் படையை நியமித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டி செல்கிறது. இந்த நெருக்கடியான சூழலில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு சரியான அளவீட்டில் ஆக்சிஜன் ஒதுக்கப்படவில்லையென்றும், ஒதுக்கப்பட்ட அளவு விநியோக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதனால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதை மறுக்க முடியாது.

இதுகுறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (மே 8) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலங்களுக்கு ஆக்சிஜனைப் பகிர்ந்து அளிப்பது தொடர்பாக 12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவில் தமிழகம் முதல் டெல்லி வரை பல மாநில மூத்த மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 10 பேர் மருத்துவர்கள், 2 அரசு அதிகாரிகள் உள்ளனர்.

இந்தக் குழு நாட்டில் ஆக்சிஜன் தேவையையும் விநியோகத்தையும் மதிப்பிட்டு பரிந்துரை வழங்குவார்கள். ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக சிறப்புப் படை பரிந்துரை வழங்கும் வரையில், தற்போது நடைமுறையில் இருப்பதுபோல மத்திய அரசு தொடர்ந்து ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்யலாம். தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து சிறப்புப் படை பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும். ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் துணைக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறப்புப் படை முடிவு எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் முறையாக சென்று சேர்ந்ததா என்பதையும் இக்குழு உறுதி செய்ய வேண்டும்.

சிறப்புப் படை, பரிந்துரைகளை நீதிமன்றத்திலும் அவ்வப்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உடனடியாகப் பணியைத் தொடங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 9 மே 2021