மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

கொரோனா காலம் என்பதால், இஞ்சியை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்கிறார்கள். அந்த வகையில் இந்த இஞ்சித் துவையல் செய்து வைத்துக்கொண்டால் சாதம், டிபன் வகைகளுக்குத் தொட்டுக்கொள்ள உதவியாக இருக்கும்.

இஞ்சித் துவையலுக்குத் என்ன தேவை?

தோலுரித்து நறுக்கிய இஞ்சி - 4 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

பூண்டு - 3 பற்கள்

புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு

உப்பு - தேவைக்கேற்ப

வெல்லம் - 4 டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைக்க

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா (மல்லி), சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - கால் டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 8

தாளிக்க

எண்ணெய்- 2 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2 மற்றும் கறிவேப்பிலை சிறிதளவு

எப்படிச் செய்வது?

தோலுரித்த இஞ்சியை நறுக்கி, எண்ணெயில் வதக்கவும். சிறிது வதங்கியதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கித் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். எலுமிச்சைப்பழ அளவு புளியை, வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.

வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இதில் காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கி, ஆறவிட்டு, பின் மிக்ஸியில் பொடி செய்து, முன்பு வதக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும். இதில் ஊறிய புளி , 4 டேபிள்ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து , தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள இஞ்சித் துவையலில் சேர்த்து நன்கு கிளறிவிடவும். சுவையான இஞ்சித் துவையல் ரெடி. இதை ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

நேற்றைய ரெசிப்பி: உருளைக்கிழங்கு - புரொக்கோலி சீஸ் பால்ஸ்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

ஞாயிறு 9 மே 2021