மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு?

மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு?

இதுவரை, 17.49 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதற்கு எதிரான போரில், மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுடன் ஒன்றிணைந்து ஒன்றிய அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்திய அரசின் ஐந்து அம்ச திட்டமான பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் தடுப்பூசி,போன்றவற்றை செயல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி போடப்பட்டவர்களின் விவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 53,25,000 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும்.

இதுவரை, 17.49 கோடி (17,49,57,770) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று(மே 8) காலை 8 மணி நிலவரப்படி 16,65,49,583 டோஸ் தடுப்பூசிகள் (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

84,08,187 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு இதுவரை 74,03,950 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3.94% டோஸ்கள் வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து மொத்தம், 66,74,970 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, 7,28,980 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திடம் இருப்பில் உள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 0.76% வீணாகியுள்ளது. இதனையும் சேர்த்து, 2,14,486 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, 1,82,644 தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

சனி 8 மே 2021