மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையிலான வித்தியாசத்தைப் பொறுத்து வருவாய் பற்றாக்குறை நிதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்துக்கு தமிழகம், ஆந்திரா, அரியானா, அசாம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 9,871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இரண்டு தவணைகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் இதுவரை 19,742 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்காக 183.67 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து தமிழகத்துக்கு இதுவரை ரூ.367.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதியாக 1 லட்சத்து 18,452 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று 15ஆவது நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த தொகை 12 தவணைகளாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 8 மே 2021