மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

5 மாநிலத் தேர்தல் முடிவு: உயரும் பெட்ரோல், டீசல் விலை!

5 மாநிலத் தேர்தல் முடிவு: உயரும் பெட்ரோல், டீசல் விலை!

ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் ரூ.100 நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்துக்கு முன்புவரை தொடர்ந்து ஆறு மாதங்களாக விலை ஏற்றப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.

இதனிடையே தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் வந்ததால், மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை ஏற்றம் இல்லாமல் நிலையாக இருந்தது. இந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளது.

கடந்த 4ஆம் தேதி முதல் நேற்று (மே 7) வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விலையை அதிகரித்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று, பெட்ரோல் 25 காசும், டீசல் 30 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.15க்கும், டீசல் ரூ.86.65க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று (மே 8) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பழையபடி மீண்டும் மத்திய அரசு உயர்த்தி வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகளால் வேலையிழந்து பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு, இந்த விலையேற்றம் மேலும் பாதிப்பை தந்துள்ளது.

இதனால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல், அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சியினரும், மக்களும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 8 மே 2021