மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு - புரொக்கோலி சீஸ் பால்ஸ்

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு -  புரொக்கோலி சீஸ் பால்ஸ்

சமீபகாலமாக, சூப்பர் ஃபுட் என்ற உணவு கலாசாரம் பரவலாகி வருகிறது. சூப்பர் ஃபுட் உணவு கலாசாரம் என்பது, அளவுக்கதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மூலமாகச் சமைக்கப்படும் உணவுகளுக்கான பொதுப்பெயர். வளரும் குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஊட்டச்சத்து தேவையுள்ளவர்கள் பலருக்கும், நன்மைகள் பல தரும் இந்த சூப்பர் ஃபுட்ஸ் கலாசாரத்தின் கீழ் செய்யப்படும் இந்த உருளைக்கிழங்கு - புரொக்கோலி சீஸ் பால்ஸை நாமும் செய்து பலன் பெறலாம்; ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

ஆய்ந்த புரொக்கோலி பூக்கள் – ஒரு கப்

உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)

பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – கால் கப்

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்

சீஸ் துண்டுகள் (சீஸ் க்யூப்ஸ்) – ஒரு கப்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப்

ஒன்றிரண்டாக உடைத்த கார்ன்ஃப்ளேக்ஸ் – தேவையான அளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புரொக்கோலி பூக்களைக் கொதிக்கும் நீரில் போட்டு 3 நிமிடங்கள் கழித்து எடுத்து, நீரை வடிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். மசித்த உருளைக்கிழங்குடன் அரைத்த விழுது, வெங்காயம், கரம் மசாலாத்தூள், சோள மாவு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நடுவே சீஸ் துண்டை வைத்து மூடி மீண்டும் உருண்டைகளாக்கவும். சோள மாவுடன் அரை கப் தண்ணீர்விட்டுக் கரைக்கவும். உருண்டைகளைச் சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதைத் தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: ரம்ஜான் ஸ்பெஷல் - பாதாம் சர்பத்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 8 மே 2021