மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

மதுரை மருத்துவமனையில் 44 பேருக்கு கொரோனா!

மதுரை மருத்துவமனையில் 44 பேருக்கு கொரோனா!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணம் மருத்துவத்துறையினர்தான். மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை அரசு, செய்து தரவில்லை. மேலும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்படும் பயிற்சி மருத்துவர்கள் வேலையை முடித்துவிட்டு மற்ற வார்டுகளுக்கு செல்வதால், அதன்மூலம் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என மருத்துவ வட்டாரத்தில் கூறுகின்றனர். இதை மின்னம்பலத்தில் கொரோனா பரவ யார் காரணம்?என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 996 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. 715 பேர் குணமடைந்து வீடு திரும்பினாலும், 5,133 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனாவால் 5 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று அதிகரித்து வருவதால், மதுரை அரசு மருத்துவமனையில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் உள்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், சிகிச்சையளிக்கும் பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 7 மே 2021