மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

ரிலாக்ஸ் டைம்: தர்பூசணி - திராட்சை ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: தர்பூசணி  - திராட்சை ஜூஸ்

அனைத்துக் கடைகளும் பகல் 12 மணிக்கே மூடப்படும் இன்றைய நிலையில், வறுத்தெடுக்கும் வெயில் காலங்களில், உடனடி ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் இந்த ஜூஸை வீட்டிலேயே செய்து அருந்தி புத்துணர்ச்சிப் பெறலாம்.

எப்படிச் செய்வது?

300 கிராம் தர்பூசணியைத் தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். 50 கிராம் பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவவும். பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்டவும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தேன் கலந்து குடிக்கலாம்.

சிறப்பு

தாமிரம், துத்தநாகம், இரும்பு இந்த ஜூஸில் நிறைந்துள்ளன. உடல் பருமனானவர்களும் தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம். தேன், தர்பூசணி, திராட்சை மூன்றுமே கோடையில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கும் தன்மை கொண்டவை.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 7 மே 2021