மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

கோவையில் கொரோனா!

கோவையில் கொரோனா!

கோவையில் நேற்று ஒரே நாளில் 2,068 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 88,342 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இரண்டாவது நாளாக நேற்றும் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலிருந்து 1,551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் சிகிச்சையில் இருக்கின்றனர். கோவையில் இதுவரை 740 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் இணைநோய் பாதிப்பு உள்ளவர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கங்கா மருத்துவமனை படுக்கைகளை ஒதுக்கிதர முன்வந்துள்ளது. ஆனால், கூடுதலாக படுக்கைகளை ஒதுக்கும்போது அதிகளவு ஆக்சிஜன் தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. படுக்கை வசதிகள் ஒதுக்கப்பட்டாலும், ஆக்சிஜன் கிடைப்பது பிரச்சினையாக இருக்கிறது.

கோவையில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மதுக்கரை, சூலூர்,அன்னூர் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே படுக்கை வசதி உள்ளது.

அதுபோன்று, கோவையில் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் ஹோட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஹோட்டல்களுக்கு சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 7 மே 2021