மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

தமிழகத்தில் 25 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா!

தமிழகத்தில் 25 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 24,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 12,97,500 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 195 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,974 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் 1,31,468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,34,141 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் 6,678 பேரும், செங்கல்பட்டில் 2039 பேரும், கோவையில் 2068 பேரும், திருவள்ளூரில் 1560 பேரும், மதுரையில் 996 பேரும், காஞ்சிபுரத்தில் 836 பேரும், திருச்சியில் 746 பேரும், திருப்பூரில் 443 பேரும், ஈரோட்டில் 443 பேரும், நெல்லையில் 688 பேரும், தூத்துக்குடியில் 796 பேரும், வேலூரில் 614 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 6 மே 2021