மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

வறண்ட பூண்டி: சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர்!

வறண்ட பூண்டி: சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர்!

பூண்டி ஏரியில் நீர் மட்டம் கிடுகிடுவெனக் குறைந்து வருவதால் சென்னை குடிநீர் தேவைக்குக் கிருஷ்ணா நதிநீரைத் திறக்க ஆந்திர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இங்கு சேமித்துவைக்கப்படும் கிருஷ்ணா நதிநீர், தேவைப்படும்போது சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கடந்த (2020) ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டது. பின்னர் இந்த (2021) ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 8.060 டிஎம்சி தண்ணீர் பூண்டி ஏரிக்குக் கிடைத்தது.

கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியதையடுத்து கிருஷ்ணா தண்ணீரை, பூண்டி ஏரிக்குத் திறக்க வேண்டாம் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 183 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 9 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

தற்போது கோடைக் காலத்தில் சென்னை குடிநீருக்குக் கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால் தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்குத் திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 6 மே 2021