மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

கொரோனா முடக்கம்: வங்கிக்கடனுக்கு முன்னுரிமை - ரிசர்வ் வங்கி

கொரோனா முடக்கம்: வங்கிக்கடனுக்கு முன்னுரிமை - ரிசர்வ் வங்கி

கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவுவதால் இந்தியப் பொருளாதாரத்துக்குப் புதிய சோதனைகள் வர உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனாவால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். நிலைமையை ஆர்பிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது. சென்ற ஆண்டை விட இந்த வருடம் கொரோனா அலை தீவிரமாக இருந்தாலும் அதன் பொருளாதார பாதிப்பு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏனென்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் இல்லை. ஓரிரு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன்கூடிய பொது முடக்கம் இருக்கிறது. வேறு சில மாநிலங்களில் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என பல்வேறு வகையான பொது முடக்கம் இருக்கின்றன” என்றவர்,

தொடர்ந்து, “கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவோம். நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி அவசர ஊக்கத்தொகையாக அறிவிக்கப்படும். கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளால் மீதமுள்ள ஆண்டு பணவீக்கம் பாதிக்கப்படும்.

கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், போலீசார் தன்னலமின்றி சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வியாழன் 6 மே 2021