மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

ரிலாக்ஸ் டைம்: கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்!

கோடையும் கொரோனாவும் துரத்தும் தற்போதைய சூழ்நிலையில் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட ரிலாக்ஸ் டைமில் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது. பருமனைக் குறைக்கும் சிறந்த பானம் இது.

எப்படிச் செய்வது?

பாதியளவு எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும். தலா ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி, கால் கைப்பிடி அளவு புதினா, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி சிறிதளவு ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு, மிக்‌ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச்சாறு மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

சிறப்பு

இதில் வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் உள்ளன. வடிகட்டிப் பருகினால், சத்துகள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது. சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பையும், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் உப்பை மட்டும் தவிர்க்கலாம்.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 6 மே 2021